18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும்
இனி அதிகபட்சமாக 18 மணி நேரம் மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ கைருல் அனுவார் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் எண்ணெய் விலை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை செலவினங்களைக் குறைப்பதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் இந்ந நடவடிக்கையை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். எண்ணெய் விலை 30 காசு குறைக்கப்பட்டிருப்பதால் ஓர் இரவில் மட்டும் எங்களுக்கு வெ.4.2 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நட்டத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணெய் நிலைய கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஆகக் கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டுதான் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் இதுவரை பெட்ரோலுக்கு 19.12 காசும் டீசலுக்கு 7 காசும் கமிஷன் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இதே கமிஷன் தொகையத்தான் நாங்கள் பெற்று வருகிறோம் என்பதால் அரசு கமிஷன் தொகையை 15 காசாக உயர்த்துவதோடு பெட்ரோல், டீசலுக்கான கமிஷன் தொகையையும் ஒருமுகப்படுத்த வேண்டும்...