பெண்களைக் குறிவைத்து கொள்ளை! - சில மணி நேரத்தில் கொள்ளையனைப் பிடித்த நெல்லை போலீஸ்
நெல்லை மாநகர் பகுதியில் தொடர்ந்து வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் கைகளில் உள்ள சிறிய பைகளை மட்டுமே குறிவைத்துக் கொள்ளையடித்த நபரிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மாநகரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை மட்டுமே குறிவைத்து, இரு சக்கர வாகனத்தில் வரக்கூடிய மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகின. ஒரே நாளில் நெல்லை டவுன், பாளையங்கோட்டை இலந்தகுளம் சாலை, டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெண்களிடம் வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள் நெல்லை மாநகரப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் குற்றப்பிரிவு காவல்துறையினர் கொள்ளையர்களைப் பிடிக்க தீவிரம் காட்டினார்கள். கொள்ளை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்தது. அதில் இரு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது தெரியவந்தது.
Comments
Post a Comment