அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது
அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் ரஷ்யாவில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். சமீபத்தில் சென்சார் முடிந்து ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளதால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பொங்கல் பண்டிகைக்கு குடும்பங்களும் கொண்டாட ஆயுத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் வியாபாரம் மும்முரமாக நடந்து முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
விஸ்வாசம் படத்தோடு ரஜினியின் பேட்ட படமும் வெளியாக இருப்பதால் முதலில் தியேட்டர்கள் தட்டுபாடு ஏற்படும் எனவும் திரையரங்கில் முக்கிய திரையை எந்தப்படத்திற்கு ஓதுக்குவது தொடர்பான பிரச்னைகள் எழுந்தாக கூறப்பட்டது. ஆனால் தற்போது விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளதால் அத்தகைய இடர்பாடுகள் அனைத்தும் களைப்பட்டுள்ளதாகவும் தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 7th Sense Cinematics எனும் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படத்தை ரஷ்யா மற்றும் உக்ரைனில் திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அஜித் படம் வெளியாவது இதுவே முதல் முறை எனவும் ரஷ்யாவில் முக்கிய 8 நகரங்களில் படம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பை பொறுத்து மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் படம் ஒன்று ரஷ்யாவில் இத்தனை நகரங்களில் வெளியாவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை எனவும் சொல்லப்படுகிறது. இத்தகவல் தற்போது காட்டுத்தீ போல சமூகவலைதளங்களில் பரவி இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக வரும் ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment