Posts

நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான ஆலை செயல்பட அளித்த ஒப்புதலை அரசாங்கம் ரத்து செய்தது

Image
பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் இரண்டு மது ஆலைகள் செயல்படுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய முடிவு செய்தது. இதற்கிடையில், இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். “வழங்கப்பட்ட ஒப்புதல் ரத்து செய்யப்படுவதாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறினார். புத்ராஜெயாவில் இன்று நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பான அமைச்சர்கள் சிறப்புக் குழு கூட்டத்தின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். அனைத்துலக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சு (Miti) உடனடியாக ரத்து கடிதத்தை வெளியிடும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார். “… எனவே ஹெய்னெக்கென் மற்றும் கார்ல்ஸ்பெர்க் தொழிற்சாலைகள் இயங்கும் என்ற பிரச்சினையும் இனி இருக்காது,” என்று அவர் கூறினார்.

MCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் – ஐ.ஜி.பி_

Image
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (MCO) இணங்குவதை உறுதி செய்வதற்காக சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலுக்கு காவல்துறையை குற்றம் சாட்டுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என்று அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார். நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் எம்.சி.ஓ விதிமுறைகளுக்கு பொதுமக்கள் இணங்குவார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார். “கோவிட்-19 பரவுவதைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நாடு முழுவதும் சாலைத் தடைகளை நாங்கள் அமைக்க வேண்டியுள்ளது”. “அத்தியாவசிய சேவைத் துறையில் இல்லாதவர்கள், எம்.சி.ஓ விதிமுறைகளைப் புரிந்து கொள்ளவும், அவர்கள் சாலைத் தடைகளை எதிர் நோக்க வேண்டும் என்றும் நான் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் இன்று புக்கிட் அமனில் கூறினார். வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் தங்கள் பணியைச் செய்து வருவதால், சாலைத் தடைகளின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பொதுமக்கள் பொறுமையாக இ...

மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் வைக்க இன்னும் சில பகுதிகள்

Image
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை கடுமையாக்குவதற்காக தற்போது சிவப்பு மண்டலத்தில் உள்ள பல பகுதிகளை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. லெம்பா பந்தாய் உட்பட பல இடங்களில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சு தற்போது சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். “இந்த நேரத்தில் நாம் அதிக கவனமாக உள்ளதால், சுகாதார அமைச்சு இன்னும் விரிவாக மதிப்பிடுகிறது”. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, 18 சிவப்பு மண்டலங்களின் பட்டியலில் லெம்பா பந்தாய் முதலிடத்தில் உள்ளது. நேற்று மதியம் நிலவரப்படி இன்றுவரை இங்கு 376 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிப்புகளின் மலேசியாவில் அதிகமான எண்ணிக்கையை, லெம்பா பந்தாய் ஏப்ரல் 3 ஆம் தேதி 322 பாதிப்புகளையும், ஏப்ரல் 4 ஆம் தேதி 367 பாதிப்புகளையும் பதிவாகியுள்ளது. மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் தற்போது மூன்று இடங்கள் உள்ளன. அதாவது குளுவாங் சிம்பாங் ரெங்காமில் இரண்டு கிராமங்கள், சிலாங்கூர் ஹுலு லங்காட்டில்...

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணி

Image
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணிக்காக இன்று கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் 4 பகுதிகள் சிவப்பு நிறக் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. செலாயங்  பெரிய சந்தை, கம்போங் பாரு, மஜிட் இந்தியா, புடு சந்தை ஆகிய இடங்களில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்ற திட்டமிடல் பிரிவின் இயக்குநர் கைருல் அஸ்மி அகமாட் தெரிவித்தார். கூட்டரசு பிரதேச சுகாதாரத் துறையின் அனுமதியுடன் இது மாதிரியான கிருமிநாசினி மருந்து தெளிப்பு நடவடிக்கை மற்ற இடங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
Image
மக்களுக்கு கொடுத்தே வாக்கு உறுதி எங்கே அமைச்சர் குலசேகரன் kuala lumpur - பொது தேர்தல் பொது மக்களுக்கு வீடியோ மூலம் 3லட்சம் தமிழ் மக்களுக்கு குடி உரிமை இல்லை ,முன்னாள் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு முழுஉருமை கொடுக்கே வில்லை கூறியது மக்களுக்கு தெறித்த ஒன்னு. ஆனால் எப்போ அமைச்சர் பதவி வந்து 3வருடம் ஆச்சி ஆனால் எப்போ வரை இவர்  3லட்சம் மக்களுக்கு  குடி உரிமை வாங்கி கொடுக்காதே காரணம்?  பொதுதேர்தல் பொது மக்கள் விடம் வாக்கு வாங்குவதுக்கு சொன்னா பொய் செய்தியா ?அந்த 3லட்சம் மக்கள் அத்திப்பதி போல காணுமா ? எங்கள் கருத்துக்கணிப்பு படி அடுத்தே பொதுதேர்தல் உங்கள் கட்சி கடும் கேவலமா தோல்வி பெரும். அதுக்குள் மக்களுக்கு நாள்செய்தி கொடுக்கே வேண்டும்

பொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்- சுகாதார அமைச்சர்

Image
அமைச்சரவை பொது மருத்துவர்கள்(ஜிபி) மற்றும் பல் மருத்துவர்களுக்கான கட்டண உச்சவரம்பை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. அம்முடிவு அமலுக்கு வருமானால் அதன் பிறகு இவ்வளவுதான் கட்டணம் விதிக்கலாம் என்ற உச்ச வரம்பு இருக்காது. “ எது பொருத்தமான கட்டணம் என்று முடிவு செய்யும் பொறுப்பு பொதுமக்களிடமே விடப்படுகிறது”, எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட் ஓர் அறிக்கையில் கூறினார். பல இடங்களிலும் விதிக்கப்படும் கட்டணங்களை ஒப்பிட்டு அதில் தங்களுக்கு உகந்தது எது என்பதைப் பொதுமக்களே முடிவு செய்து கொள்ளலாம். இக்கொள்கை நடைமுறைக்கு வரும்போது சிகிச்சையைத் தொடக்குவதற்கு முன்பே நோயாளிகளுக்கு அதற்கான கட்டணத் தொகை தெரிவிக்கப்பட வேண்டும். அக்கொள்கை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை. அதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்றாரவர்.

நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான் பிகேஆர் இளைஞர்கள் மோதல்’- அன்வார்

Image
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று பிகேஆர் இளைஞர்களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புக்கு தன்னுடைய “மன்னிக்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் போக்குமே” காரணம் என்கிறார். “நான் விட்டுக்கொடுப்பவன், மன்னிக்கும் குணமுள்ளவன் அதன் விளைவாக சில நேரங்களில் நேற்று நடந்ததைப்போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன”, என்றவர் சொன்னார். மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார். “நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் இப்படி நடந்துகொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களில் பெரும்பாலோரை நீக்கியிருக்க வேண்டும்”, என்றாரவர். நேற்று பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தில் இரண்டு பிரிவினருக்கிடையில் நிகழ்ந்த கைகலப்புப் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார். சண்டை இட்டுக் கொண்டாலும் இரு தரப்பினருக்கும் கட்சிமீது விசுவாசம் குறையவில்லை என்று கூறியவர்,  இரு தரப்புத் தலைவர்களும் இன்று பீகேஆர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொன்ண்டதைச் சுட்டிக்காட்டினார்.