கோலாலம்பூர் to திருச்சி” – 168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!

லேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று 168 பயணிகளுடன் பறந்துள்ளது சிறப்பு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம். (Special Flight to Trichy) அண்டை நாடான இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுவது தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (Special Flight to Trichy) இந்த கொரோனா காலகட்டத்தில் பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கும் மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. ஏற்கனவே அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான விமான பட்டியலை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். இந்நிலையில் அதுமட்டும் இல்லாமல் சில சிறப்பு விமானங்களையும் அவ்வப்போது ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றது வந்தே பாரத் குழு. இதன் அடிப்படையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 168 பயணிகளுடன் நேற்று சிறப்பு விமானம் ஒன்று திருச்சி வந்திறங்கியது. இன்றுவரை பல லட்சம் மக்கள் வந்தே பாரத் என்ற திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். கடந்த மே மாதம் முதல் இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 மாதங்களாக மலேசியாவில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு செயல்பட்டு வரும் இந்த சேவை சில தினங்களுக்கு முன்பு தனது 100வது விமான சேவையை அளித்தது குறிப்பிடத்தக்கது. (Special Flight to Trichy) இந்த 100வது சேவையில் மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்கள் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வந்தனர். பஹ்ரைன், டோஹா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு இந்த வந்தே பாரத் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த பயணத்திற்கு வழக்கத்தை விட அதிக அளவில் டிக்கெட் விலை பெறப்படுவதாக சில குற்றச்சாட்டுகளும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Comments

Popular posts from this blog

TERTHAL AH? NAANGE READY DATO SERI SARAVANAN SAVAL

Marubadiyum kamalanathannukku seat ah?