‘மாடலாக’ மாறுகிறார் சுகு பவித்ரா; ஒற்றுமையின் சின்னம் என்று புகழாரம்
- Get link
- X
- Other Apps
சுகு பவித்ரா, இப்போது சமைப்பது மட்டுமல்லாமல், ஒரு ‘மாடலாகவும்’ மாறியிருக்கிறார். ஒரு பத்திரிகையின் அட்டையாக வெளிவந்துள்ள அவரது படம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமையல் வீடியோவின் பிரபலமான யூடியூபராக விளங்கும் சுகு பவித்ராவின் படம், ஒப்பனை கலைஞர் ராஸ்ஸி மூசாவால் இணையத்தில் பதிவேற்றப்பட்ட பின்னர் பிரபலமாக மாறியது. இது ‘பெபாத்துங்’ (Pepatung) என்ற சஞ்சிகையின் முகப்பாக வெளிவந்துள்ளது.
மலேசியாவில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதாக கருதுவதால் அவர்கள் பவித்ராவைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினர்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான இந்த இல்லத்தரசி, கணவர் எம். சுகுவுடன் பேராக் மாநிலத்தில் உள்ள சுங்கை சீப்புட் தோட்டத்தில் வசிக்கிறார். பொது மக்களின் கருத்துக்கள் பெரும்பாலும் அவரது அழகைப் பாராட்டியுள்ளன.
ஈப்போவில் உள்ள புந்தோங்கைச் சேர்ந்த பவித்ரா, 28, சமையல் திறன் தவிர, தேசிய மொழியில் சரளமாக பேசும் திறனையும் கொண்டுள்ளார். அதோடு, வீடு மற்றும் சமையலறையின் தூய்மை, பணிவு மற்றும் மரியாதையான பழக்கவழக்கங்களையும் கொண்டு, மக்களின் மனங்களைத் திருடியுள்ளார்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment