எங்களின் பணத்தை செலுத்தி விடுங்கள்! தமிழ்நேசன் நிர்வாகம் மீது முன்னாள் ஊழியர்கள் போலீஸ் புகார்


கோம்பாக், ஜூலை 18-
தங்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளப்பட்ட தொகையை உடனடியாக சம்பந்தப்பட்ட இலாகாவிற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நேசன் நிர்வாகத்தின் முன்னாள் ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக போலீஸ் புகாரை மேற்கொண்டனர்.
ஜனவரி இறுதியோடு 96 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நேசன் நாளிதழ் நிர்வாகம் தமது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது.
அப்போது பணியாற்றிய ஊழியர்களுக்கு பிப்ரவரி மார்ச் மாத ஊதியம் வழங்கப்படும் என உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் மார்ச் மாத ஊதியம் வழங்கப்பட வில்லை என்பதையும் காரணம் காட்டி இந்த போலீஸ் புகார் செய்யப்பட்டது.
கோம்பாக் போலீஸ் தலைமையகத்தின் முன் கூடிய 30க்கும் அதிகமான தமிழ் நேசனின் முன்னாள் ஊழியர்கள் இந்த புகாரை மேற்கொண்டனர். தமிழ்நேசன் நடவடிக்கைக் குழு தலைவர் சுந்தர் தலைமையில் இந்த போலீஸ் புகார் செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாக வேலை செய்த நிறுவனத்தின் மீது போலீஸ் புகார் மேற்கொள்வது தங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக ஆசிரியர் கே பத்மநாபன் தெரிவித்தார். இருப்பினும் எங்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய கடப்பாடும் எங்களுக்கு உண்டு. அதன் காரணமாகவே இந்த போலீஸ் புகார் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எங்களின் ஊதியத்திலிருந்து இபிஎப், சொக்சோ, காப்புறுதி ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து கொள்ளப்பட்டது. அவற்றை முறையாக செலுத்தாத காரணத்திற்காக எங்களது சலுகைகளும் மறுக்கப்பட்டது என பத்மநாபன் குறிப்பிட்டார்.
தமிழ் நேசனில் நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ வேள்பாரி, வாரியத் தலைவர் டத்தின்ஸ்ரீ இந்திராணி சாமிவேலு, அதிகமான பங்குகளை கொண்டிருக்கும் துன் சாமிவேலு, ஆகியோர் தமிழ் நேசன் பணியாளர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என பி எஸ் எம் கட்சியைச் சேர்ந்த அருட்செல்வம் வலியுறுத்தினார்.
தமிழ்நேசன் நிர்வாகத்தைப் பொறுத்தவரை மலேசியாவில் மிகப்பெரிய செல்வந்தர்கள் தான் அதன் உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் 14 லட்சம் வெள்ளியை செலுத்துவது அவர்களுக்கு பெரிய தொகையாக இருக்காது. 
குறிப்பாக ஊழியர்கள் பணத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட மூன்று லட்சம் வெள்ளியை முதலில் செலுத்த வேண்டும். 
பின்னர் பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக உழைத்த ஊழியர்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்பட வேண்டுமென அருட்செல்வம் கேட்டுக்கொண்டார்.


Comments

Popular posts from this blog

மதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!!

Therthal vanthal pothum viddu viddu poithu pichai eddukkum thalaivarggal