இந்த அறுபத்து ஒரு வருடத்தில் காமாட்சி கண்டுபிடித்த மலேசியா தமிழர்கள் பிரச்சனை என்ன தெரியுமா?
Johor- அரசியல் என்றாலே மக்களுக்கு உதவி செய்வது இல்லை மக்களை கேலி செய்வதாக தோணுகிறது! தீபாவளி பொழுது மக்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு தமிழ் மக்களை இழிவுபடுத்துவது நம் அரசியல் இந்திய தலைவர்கள் தான்!
61 வருடம் bn ஆட்சியில் இருந்தபோது தீபாவளி நேரத்தில் சுமார் 10 கிலோ அரிசி கொடுத்து தன் மக்களை 10 கிலோ அரிசி வாங்க கூட தகுதி இல்லாதவர்களா!! என யோசிக்க வைத்தார்கள்! இப்பொழுது டிஏபி தலைவி சபாய் காரக் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பி காமாட்சி தீபாவளி பொழுது தொடர்ச்சியாக பத்து கிலோ அரிசி கொடுத்து மக்களை ஏமாற்றுவதும் தன் சொந்த விளம்பரத்துக்கு செய்வது முறையா?
தேர்தல் போது பத்து கிலோ அரிசி கொடுத்து தமிழ் மக்களை இழிவு படுத்த மாட்டேன், தமிழ் மக்களுக்கு வேண்டியது 10 கிலோ அரிசி அல்ல சம உரிமை , மேலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவேண்டும் கூறிய காமாட்சி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
உங்கள் விளம்பரத்திற்கு மக்களை இழிவு படுத்தாதே! தேர்தல் போது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா? நீங்கள் கொடுத்த வாக்கு நிறைவேற்றுங்கள்!
சும்மா சும்மா விளம்பரத்துக்கு அலையாதீர்கள் காமாட்சி அவர்களே, மேலும் மக்களை அரிசி மூலம் தெளிவு படுத்தினால் நாங்கள் குரல் கொடுப்போம் இப்படிக்கு மக்கள் மகன் சமூக சேவகன் மக்களின்குரல் நவீன் ஜே கூறினார்
Comments
Post a Comment