வேதமூர்த்தி எங்களுக்கு உதவவில்லை!
Kuala lumpur - சிபில் ஆலயம் சுமார் நூற்று நாற்பது வருட காலம் அடையாளம். இந்த கோயிலை உடைப்பதற்கு பலர் திட்டம் தீட்டி வருகிறார்கள். தொடர்ந்து போன வருடம் முன்னாள் அரசாங்கம் இருந்த போதும் உடைக்க முயற்சி செய்தபோது pakatan harapan இந்த கோயிலுக்காக ஒரு வாக்குறுதி கொடுத்து இருந்தார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மலேசியாவில் எந்த கோவிலிலும் உடைக்க விடமாட்டேன், மேலும் இப்போது அமைச்சராக இருக்கும் வேதமூர்த்தி அவர்களும் மேடையேறி வாக்குறுதி கொடுத்திருந்தார் ஆனால் இ;ப்பொழுது அந்த மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எங்கே போனது தெரியவில்லை ?கடந்த முடிந்த பொதுத்தேர்தலில் pakatan harapan மக்களுக்கு சிறப்பாஅவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேடித் தருவார்கள் என நம்பி பல கோடி மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டு வேக வைத்தும் மக்கள் நம்பிக்கைக்கு தோல்விதான் தேடி கொடுத்தார்கள் ,இப்போ உள்ள புதிய அரசாங்கம் அதைப்போல பிரதமர் அவர்களும் மேடைக்கு மேடை தமிழர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம் மேலும் அவர்களுக்கு சேரவேண்டிய சம உரிமை கொடுக்கும் சொன்ன வாக்கு காற்றோடு மறைந்தது .பழைய அரசாங்கம் இருந்த போதும் நம் தமிழர்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வே இல்லை கேட்டும் கிஞ்சித்தும் அழுதோம் ஆனால் நம் கண்ணீரை துடைக்க ஒரு அமைச்சர்கள் இல்லை இப்போது நான்கு அமைச்சர் இருந்த போதும் நம் தமிழ் சமுதாயம் உரிமையை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம் மலேசியாவில் தமிழர்கள் வாழ்க்கை தொடர்ந்து இப்படித்தான்? கேள்விக்குறி
Comments
Post a Comment