அன்பளிப்பை வாங்க மறுத்த அமைச்சர் அந்தோனி லோக்!!
- Get link
- X
- Other Apps
‘அன்பளிப்பு-இல்லை’ என்ற அரசாங்கத்தின் கொள்கையை வலியுறுத்திய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், அவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்க மறுத்து விட்டார்.
“நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ரிம500க்கும் கூடுதலானது”, என்று கூறிய அமைச்சர் அந்தோனி, அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
அந்த போனின் சில்லறை சந்தை விலை ரிம1,249 ஆகும்.
பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், அரசு ஊழியர்களுக்கு அன்பளிப்பு அளிப்பது பற்றிய அரசாங்கத்தின் கொள்கையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நினைவூட்டினார்.
நாங்கள், புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள், சொன்னதைச் செய்வோம்.
எதிர்காலத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவர்கள் புதிய அரசாங்கத்தின் புதிய விதிமுறையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்தோனி லோக் வலியுறுத்தினார்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment