உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆங்கிலப் பயிற்சி
- Get link
- X
- Other Apps
போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் அதிகாரிகள் உள்பட, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று அவர்களின் ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் உத்தரவு.
தொடக்கக் கட்டமாக தீவகற்ப மலேசியாவைச் சேர்ந்த 30 உயர் அதிகாரிகள் ஆங்கிலப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். அவர்கள் கோலாலும்பூர் அரச மலேசிய போலீஸ் கல்லூரியில் ஐந்து-நாள் பயிற்சி பெறுவார்கள்.
மற்றொரு நிலவரத்தில் பூஸி, சூதாட்ட மையங்களுக்கு எதிரான அதிரடிச் சோதனைகளில் அவசியமேற்பட்டால் தாமும் கலந்துகொள்ளப் போவதாகக் கூறினார்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment