ஆகஸ்ட் 31க்குப் பிறகு ஆவணமற்ற குடியேறிகள்மீது நடவடிக்கை

ஆகஸ்ட்    31   தொடங்கி   ஆவணங்கள்   வைத்திருக்காத   குடியேறிகள்மீது   குடிநுழைவுத்துறை   நடவடிக்கை  எடுக்கும்.

இதனைத்    தெரிவித்த   அதன்   தலைமை    இயக்குனர்     முஸ்டபார்   அலி,    குடிநுழைவுத்துறை    அதன்   நடவைக்கைகளை   முடுக்கிவிட்டு    சட்டவிரோத  குடியேறிகளைக்  கைது   செய்யும்   என்றார்.

ஆவணமற்ற   குடியேறிகளை   வேலைக்கு   வைத்துள்ளவர்களும்   சேர்த்தே  கைது   செய்யப்படுவார்கள்  என்றாரவர்.

“தாமே   சரணடையும்    திட்டமொன்றை,  3+1   என்ற  பெயரில்  பிரபலமாக   விளங்கும்   திட்டமொன்றைத்  தொடங்கியுள்ளோம்.  அதன்படி  சரணடைவோர்   அவர்களின்   நாடுகளுக்குத்   தாமே   திரும்பிச்   செல்ல    அனுமதிக்கப்படுவார்கள்.

“அவர்கள்    சரணடைய   ஆகஸ்ட்   30வரை   வாய்ப்பு   உள்ளது.  அதன்பின்னர்   கடும்   நடவடிக்கை    எடுக்கப்படும்”,  என்றவர்   இன்று  கூறினார்.

ஜுலை  முதல்   நாள்   தொடங்கப்பட்ட  ஒப்  மெகாவின்கீழ்  இதுவரை   மூவாயிரத்துக்கும்   மேற்பட்ட    சட்டவிரோத   குடியேறிகள்   பல்வேறு   குற்றங்களுக்காகக்  கைது   செய்யப்பட்டிருப்பதாக   முஸ்டபார்   கூறினார்.

Comments

Popular posts from this blog

பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணி

Therthal vanthal pothum viddu viddu poithu pichai eddukkum thalaivarggal

Khalid bin Abdul Samad U SIAPE?