ஆகஸ்டுக்குள் தனியார் துறைக்குக் குறைந்தபட்ச சம்பளம்- குலா
- Get link
- X
- Other Apps
தனியார் துறையில் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச சம்பளம் குறித்து அரசாங்கம் ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிவிக்கும்.
இதைத் தெரிவித்த மனிதவள அமைச்சர் எம். குலசேகரன், தேசிய சம்பள ஆலோசனை மன்றம் (எம்பிஜிஎன்) 2016 குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை மறுஆய்வு செய்ய ஜூன் 13-இல் கூட்டம் நடத்தும் என்றார்.
“எம்பிஜிஎன் கூட்டத்துக்குப் பின்னர் அரசாங்கம் முடிவெடுப்பதற்காக அமைச்சு மகஜர் ஒன்றைத் தயாரிக்கும்”, என்றாரவர். குலசேகரன் இன்று அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
மற்றொரு நிலவரத்தில், நாட்டில் உள்ள 1.2 குடும்பத் தலைவிகள் அவர்களின் குடும்பங்களுக்குச் செய்யும் சேவையைப் பாராட்டி அவர்களைச் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ்க் கொண்டுவரவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது என்றவர் சொன்னார்.
இதன் சாத்தியக்கூறு ஆராயப்படும் என்றாரவர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment