பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணி

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணிக்காக இன்று கோலாலம்பூர் சுற்று வட்டாரங்களில் 4 பகுதிகள் சிவப்பு நிறக் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. செலாயங் பெரிய சந்தை, கம்போங் பாரு, மஜிட் இந்தியா, புடு சந்தை ஆகிய இடங்களில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்ற திட்டமிடல் பிரிவின் இயக்குநர் கைருல் அஸ்மி அகமாட் தெரிவித்தார். கூட்டரசு பிரதேச சுகாதாரத் துறையின் அனுமதியுடன் இது மாதிரியான கிருமிநாசினி மருந்து தெளிப்பு நடவடிக்கை மற்ற இடங்களிலும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.