Posts

Showing posts from December, 2019

பொது மருத்துவர்களுக்கான கட்டண வரம்பு அகற்றப்படும்- சுகாதார அமைச்சர்

Image
அமைச்சரவை பொது மருத்துவர்கள்(ஜிபி) மற்றும் பல் மருத்துவர்களுக்கான கட்டண உச்சவரம்பை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. அம்முடிவு அமலுக்கு வருமானால் அதன் பிறகு இவ்வளவுதான் கட்டணம் விதிக்கலாம் என்ற உச்ச வரம்பு இருக்காது. “ எது பொருத்தமான கட்டணம் என்று முடிவு செய்யும் பொறுப்பு பொதுமக்களிடமே விடப்படுகிறது”, எனச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட் ஓர் அறிக்கையில் கூறினார். பல இடங்களிலும் விதிக்கப்படும் கட்டணங்களை ஒப்பிட்டு அதில் தங்களுக்கு உகந்தது எது என்பதைப் பொதுமக்களே முடிவு செய்து கொள்ளலாம். இக்கொள்கை நடைமுறைக்கு வரும்போது சிகிச்சையைத் தொடக்குவதற்கு முன்பே நோயாளிகளுக்கு அதற்கான கட்டணத் தொகை தெரிவிக்கப்பட வேண்டும். அக்கொள்கை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை அமைச்சர் தெரிவிக்கவில்லை. அதற்குச் சிறிது காலம் பிடிக்கும் என்றாரவர்.

நான் விட்டுக்கொடுப்பவன், அதனால் வந்த வினைதான் பிகேஆர் இளைஞர்கள் மோதல்’- அன்வார்

Image
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், நேற்று பிகேஆர் இளைஞர்களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புக்கு தன்னுடைய “மன்னிக்கும் மனமும் விட்டுக்கொடுக்கும் போக்குமே” காரணம் என்கிறார். “நான் விட்டுக்கொடுப்பவன், மன்னிக்கும் குணமுள்ளவன் அதன் விளைவாக சில நேரங்களில் நேற்று நடந்ததைப்போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன”, என்றவர் சொன்னார். மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார். “நான் கடுமையாக நடந்து கொண்டிருந்தால் இப்படி நடந்துகொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களில் பெரும்பாலோரை நீக்கியிருக்க வேண்டும்”, என்றாரவர். நேற்று பிகேஆர் இளைஞர் ஆண்டுக் கூட்டத்தில் இரண்டு பிரிவினருக்கிடையில் நிகழ்ந்த கைகலப்புப் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் அவ்வாறு கூறினார். சண்டை இட்டுக் கொண்டாலும் இரு தரப்பினருக்கும் கட்சிமீது விசுவாசம் குறையவில்லை என்று கூறியவர்,  இரு தரப்புத் தலைவர்களும் இன்று பீகேஆர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொன்ண்டதைச் சுட்டிக்காட்டினார்.

அன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு செய்க: போலீசுக்கு யூசுப் ராவுத்தர் வலியுறுத்து

Image
அன்வார் இப்ராகிம்மீதான சத்திய பிரமாணத்தை புலனாய்வு செய்க: போலீசுக்கு யூசுப் ராவுத்தர் வலியுறுத்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தன்னிடம் பாலியல் நீதியில் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டிய அவரின் முன்னாள் உதவியாளர், அச்சம்பவத்தை விவரமாக விவரித்து தான் செய்த சத்திய பிரமாணத்தைப் போலீஸ் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதன் தொடர்பில் முகம்மட் யூசுப் ராவுத்தர் இன்று செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் தன்னுடைய சத்திய பிரமாணத்தை நன்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே அப்புகார் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். “என்னுடைய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டுள்ளது”, என்றாரவர். அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரியான யூசுப்,26, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சத்திய பிரமாணம் செய்தார். அதில் அன்வார் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார்.